Wednesday, November 6, 2013

காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 30 இந்திய மீனவர்கள் 14 நாட்கள் விளக்கமறியலில்!

Wednesday, November 06, 2013
இலங்கை::காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 30 இந்திய மீனவர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்திய புதுக்கோட்டை மற்றும் இராமேஷ்வரம் பகுதியைச் சேர்ந்த 30 மீனவர்கள் 7 படகுகளில் வந்த நிலையில் திங்கட்கிழமை 
இரவு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

பொலிஸாரிடமிருந்து மேற்படி மீனவர்களை பொறுப்பேற்ற கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் இவர்களை செவ்வாய்க்கிழமை (5) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.

இதன்போது மேற்படி மீனவர்களை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment