Wednesday, November 6, 2013

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ளவேண்டும்: சுப்ரமணியம சுவாமி!

Wednesday, November 06, 2013
சென்னை::இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில்  பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் கலந்துகொள்ளவேண்டும் என இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்ரமணியம சுவாமி தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய கொள்கைகளை விடவும், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மேலானது என்பதை வெளிப்படுத்தும் வகையில் பிரதமர் மன்மோகன் சிங் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என சுப்ரமணியம் சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை செல்லும் பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து கலந்துரையாட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணத்திற்குச் சென்று, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட வேண்டுமெனவும் ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment