Wednesday, November 27, 2013
இலங்கை::கட்டுநாயக்க பகுதியில் மோட்டார் வாகனம் ஒன்றை வழிமறித்து ஒரு தொகை பணத்தை கொள்ளையிட்
டு தப்பிச் சென்ற சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் மருதானை பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்களுக்கு பல்வேறு கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் வாகனமும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் கட்டுநாயக்கவில் மோட்டார் வாகனத்தில் பயணித்த சந்தர்ப்பத்தில் மற்றுமொரு மோட்டார் வாகனத்தில் வந்த குழுவினர் குறித்த வாகனத்தை மறித்து பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

No comments:
Post a Comment