Wednesday, November 27, 2013
மேல்பேண்::புலிகள் அமைப்பு மீதான தடையை அவுஸ்ரேலியா அரசாங்கம் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீடித்துள்ளதாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிசப் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்திற்கு நிதியிடலைக் கட்டுப்படுத்துவதற்குரிய ஐநா பாதுகாப்புச் சபைத் தீர்மானத்திற்கு அமைய, அவுஸ்திரேலியாவின் கடப்பாடுகளை நிறைவேற்றும் வகையில் பட்டியலிடல்கள் மேற்கொள்ளப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் அறிவித்துள்ளார்.
புதிய திருத்தங்களின் பிரகாரம், பயங்கரவாத இயக்கங்கள் என்ற பட்டியலில் இருந்து சில அமைப்புக்கள் நீக்கப்பட்டுள்ளன. அதில் சில அமைப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இயக்கங்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடை மூன்று ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும். அவற்றில் புலிகள் இயக்கம், அல்-ஷஹாப், ரியல் ஐஆர்ஏ ஆகியவையும் அடங்கும்.
புலிகள் தீவிரவாத செயற்பாடுகளுக்கு நிதி திரட்டுவதைத் தடுப்பதற்கான, ஐ.நா பாதுகாப்புச் சபையின் பிரகடனத்துக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்கத்துடன், அல் சஹாப் மற்றும் ஐரிஸ் விடுதலை இராணுவம் ஆகியவற்றின் மீதான தடையையும், அவுஸ்ரேலியா நீடித்துள்ளது.
புலிகளின் தீவிரவாதத்தை அவுஸ்ரேலியா கடுமையாக எதிர்ப்பதாகவும், எந்த வகையிலான தீவிரவாத செயற்பாடுகளையும் அவுஸ்ரேலியா தடுக்கும், அதற்கெதிராகப் போராடும் என்றும் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்...
இதன்படி புலிகள் அமைப்பிற்கு ஆதரவான செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 32 நாடுகள் புலிகள் அமைப்பை தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தீவிரவாத புலிகள் அமைப்பு யுத்த ரீதியில் கடந்த 2009ம் ஆண்டு தோற்கடிக்கப்பட்டது. அதன் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டும் பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர்.

No comments:
Post a Comment