Wednesday, November 27, 2013

இலங்கை (புலிகள்) தமிழர் படுகொலை குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவுக்கு மீண்டும் கேமரூன் எச்சரிக்கை! புலிகள் இதுவரைக்கும் எவரையும் கொலைகள் செய்யவில்லையாம் :கேமரூன்!!!

Wednesday, November 27, 2013
லண்டன்::இலங்கையில் சமீபத்தில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கலந்து கொண்டார்.
 
லண்டன் பத்திரிகைக்கு  பிரதமர் டேவிட் கேமரூன் பேட்டி அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:–
 
நான் இலங்கையின் வடக்கு மாகாணம் சென்று திரும்பி ஒரு வாரம் ஆகவிட்டது. ஆனாலும், அங்கு பார்த்த காட்சிகள் இன்னும் என் மனதில் நிழலாடுகின்றன. முதலில் (புலிகள்) தமிழர்கள் படுகொலை குறித்து நம்பகமான ஒளிவு மறைவற்ற சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
 
இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்த போது அடுத்த மாதத்துக்குள் சர்வதேச விசாரணை தொடங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். விசாரணை தொடங்காவிட்டால் நாங்கள் ஐ.நா. மூலமாக அத்தகைய விசாரணையை கேட்போம் என அவரிடம் தெளிவாக கூறிவிட்டேன்.
இலங்கையில் மனித உரிமை விஷயத்தில் முன்னேற்றம் வேண்டும். உண்மையான கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரம் நிலவ வேண்டும்.
 
தமிழர் – சிங்களர் இடையே நல்லிணக்கம் வேண்டும்.நான் இலங்கை சென்றதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், நான் சென்றதால் அங்கு செய்ய வேண்டிய காரியங்களை வலியுறுத்த முடிந்தது.
இவ்வாறு டேவிட் கேமரூன் கூறியுள்ளார்.

tamil matrimony_INNER_468x60.gif
 
 

No comments:

Post a Comment