Wednesday, November 6, 2013

புலிப்பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை விடுவித்து சமய நட்புறவை பலப்படுத்திய மாபெரும் மக்கள் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, November 06, 2013
இலங்கை::ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆயிரக்கணக்கான சவால் களுக்கு மத்தியில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.2005ல் அவர் ஜனாதிபதியாகத் தெரிவானார்.
 
நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அவர் நாட்டு மக்களுக்கு அரும் பணி செய்துள்ளார்.
 
மத விவகார ஒழுக்க மேம்பாட்டு அமைச்சையும் தமது நிர்வாகத்தின் கீழ் வைத்த ஜனாதிபதி, மத ஒற்றுமைக்காக பாடுபட்டவர்.ஒரே கூரையின் கீழ் பெளத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத அமைச்சுக் களை ஒன்றாக்கி சகல மதத்துக்கும் சமமான கவனிப்பை வழங்கினார்.அவரின் மத சகவாழ்வு தொடர்பாக கடந்த 04 ஆண்டுகளிலும் நான் அனுபவம் பெற்றேன்.
நான் பெளத்தன், மதநெறிப் பாடசாலைக்குச் சென்றவன். பெளத்த மதநெறிப் பாடசாலைக்குச் சென்ற ஒருவருக்கு பிறருக்கோ, பிற மதங்களுக்கோ தொந்தரவு செய்ய உரிமை இல்லை.
 
சகல மதங்களையும் பாதுகாக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அரச தலைவர், பெளத்தர் என்ற ரீதியில் அதனைச் செய்கிறேன்.” இவ்வாறு ஜனாதிபதி தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.
 
பிரதமர் டி. எம். ஜயரத்ன பிரதமரான பின்னர் பெளத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத குருமார்களை அவரின் இணைப்புச் செயலாளர் களாகவும், இணைப்பு அதிகாரி களாகவும் ஜனாதிபதி நியமித்தார்.
நான்கு மதங்களின் தலைவர் களையும் தமது அலுவலகத்தில் வைத்த ஒரே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆவார்.
 
இதனை வரலாற்றில் நாம் என்றும் காண முடியாது.
விவசாயிகளுக்கு நீர் வழங்க தடை ஏற்படுத்திய புலிகளுக்கு அவர் தகுந்த பாடம் கற்பித்தார்.
 
அன்று முதல் மக்கள் சுதந் திரத்தை அனுபவிக்க இடம் ஏற்பட்டது.
இன்று நாம் சுதந்திரமாக உள்ளோம். இது எமக்கு பெரும் பெருமையாகும்.
புலிப்பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தமிழ் புலம்பெயர் அமைப்புகள் உட்பட மேற்கத் திய ஏகாதிபத்தியவாத சக்திகள் அவர் மீது மனித உரிமை மீறல் குற் றச்சாட்டுக்களைச் சுமத்த முயற்சிக்கின்றன.
 
நாட்டின் பெரும்பான்மையினர் என்றும் ஜனாதிபதி பக்கமே உள்ளனர்.
எனவே எந்தச் சதிகார சக்திகளும் அவரை அடக்க முடியாது. அவர் மக்களுடன் நெருக்கமான மக்கள் தலைவர் ஆவார். யுத்தம் முடிந்த பின்னர் அவர் ஓய்வெடுக்கவில்லை. அபிவிருத்திப் பணிகளைத் தொடங்கி னார். பாரிய அபிவிருத்தி உருவானது.
 
இன்றைய அபிவிருத்தி வேகம் தொடர்ந்தால் இன்னும் 05 ஆண்டுகளில் நாம் ஜப்பானின் நிலையை அடைந்து விடுவோம்.உலகத் தலைவர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பு, நம்பிக்கை காரணமாக பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை இலங்கையில் நடத்த நமது நாடு தெரிவாகியுள்ளது.
 
நாட்டை விடுதலை செய்த ஜனாதிபதிக்கே எமது கெளரவம் உண்மையாகச் சென்றடைய வேண்டும்.அவருக்கு நாம் முழு மனதுடன் நல்லாசி கூற வேண்டும்.அவரின் சேவைகளைத் தொடர இறை ஆசிகளைக் கோரிப் பிரார்த்திப்போம்.இலங்கைக்குச் சுபிட்சத்தை பிரார்த் திப்போம்.
 
வண. சரத் ஹெட்டி ஆராச்சி,
இணைத்தலைவர், தேசிய ஐக்கியத்துக்கான சர்வமத அமைப்பு
(எப். எம்)

No comments:

Post a Comment