Wednesday, November 06, 2013
சென்னை::செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக மங்கள்யான் விண்கலம் நேற்று பிற்பகல் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இத்திட்டத்துக்காக ரூ450 கோடி செலவிடப்பட்டுள்ளது.
பூமிக்கு அடுத்தபடியாக, செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுவதே இதற்கு காரணம் ஆகும். செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பி உள்ளன. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் ஒரு விண்கலத்தை அனுப்பி இருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்தியாவும், இப்போது செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது.
இந்தியா செவ்வாய்கிரகத்தை பற்றி ஆராய்வதற்காக 'மங்கள்யான்' என்ற விண்கலத்தை அனுப்புகிறது. பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பதை அறியும் முயற்சியாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைக் கோளை இந்தியா அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றியபடி அந்த கிரகத்தின் மேற்பரப்பு பற்றியும், அங்கு மீத்தேன் வாயு இருக்கிறதா? என்பது பற்றியும் ஆய்வு செய்து தகவல்களை அனுப்பும். 1,350 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தில் 14.49 எடைகொண்ட ஆராய்ச்சி கருவிகள், புகைப்பட கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. விண்கலம் தயாரிப்பு மற்றும் விண்கலத்தை ஏவுவதற்கான மொத்த திட்ட செலவு ரூ.450 கோடி ஆகும்.
செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பும் இந்தியாவின் இந்த முயற்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருந்தன.
இதற்கான கவுண்டவுன் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதிஷ் தவானில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
பி.எஸ்.எல்.வி சி_25 என்ற ராக்கெட் மூலம் நேற்று பிற்பகல் 2 மணி 38 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்பட்டது. மங்கள்யான் செயற்கைகோள், 44 நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையில் இணையும் என கூறப்பட்டிருந்தது. அதன் படி 44 நிமிடங்கள் கழிந்த பின் வெற்றிகரமாக பூமியின் சுற்றுபாதையில் விண்கலத்தை விஞ்ஞானிகள் நிலை நிருத்தினர்.
பூமியின் சுற்றுப்பாதையில் 20 முதல் 25 நாட்களுக்கு சுற்றியபின் செவ்வாய் கோளுக்கு டிசம்பர் 1 ஆம் தேதி பயணத்தை தொடங்கும் எனவும், அதன் சுற்றுப்பாதையில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24_ம் தேதி இணையும் எனவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே திட்டமிட்ட படி சரியான பாதையை நோக்கி மங்கள்யான் விண்கலம் சென்று கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இது, நீள்வட்டப் பாதையில் விண்ணில் பாய்ந்த அடுத்த 44வது நிமிடம் நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் ராதாகிருஷ்ணனும் தெரிவித்தார்.
பி.எஸ்.எல்.வி. சி_5 ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம் 300 நாட்கள் விண்வெளியில் பயணம் செய்து அடுத்த ஆண்டு செப்டம்பர் 24_ந் தேதி செவ்வாய் கிரகத்தின் அருகே செல்லும். செவ்வாய் கிரகத்தை நீள்வட்ட பாதையில் சுற்றியபடி, அந்த கிரகத்தை பற்றி ஆய்வு செய்து தகவல்களை பூமிக்கு அனுப்பும்.இந்தியாவின் செவ்வாய் கிரக ஆராய்ச்சியை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்ய அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகள் ஏற்கனவே விண்கலத்தை அனுப்பி உள்ளன.
ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமும் ஒரு விண்கலத்தை அனுப்பி இருக்கிறது. தற்போது
செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக செயற்கைக் கோள் அனுப்பிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment