Monday, November 25, 2013

கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் இன்றும் விரட்டியடிப்பு?

Monday, November 25, 2013
ராமேசுவரம்::ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 1500–க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று அதிகாலை 400–க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் ஒரு பகுதியினர் மீன்வளம் நிறைந்து காணப்படும் கச்சத்தீவு அருகே இன்று பிற்பகல் கடலில் வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு 5 குட்டி ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
 
மேலும் இந்த பகுதியில் மீன்பிடிக்க வரக்கூடாது எனவும் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து உயிர் பிழைத்தால்போதும் என நினைத்த மீனவர்கள் பாதியிலேயே மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பினர்.
 
அப்போது இலங்கை கடற்படையினர் 2 படகுகளையும், அதிலிருந்த 8 மீனவர்களையும் சிறை பிடித்துக் கொண்டு இலங்கைக்கு புறப்பட்டனர். உடனே மீனவர்கள் நாங்கள் இனிமேல் இந்த பகுதியில் மீன்பிடிக்க வரமாட்டோம் என்று இலங்கை கடற்படையினரிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டனர்.
 
இதையடுத்து 2 படகுகளையும், 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.
 
கச்சத்தீவு அருகே நேற்றும் மீன் பிடித்த ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால்  எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.

No comments:

Post a Comment