Monday, November 25, 2013

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் 15 பேரை விடுவிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்று உத்தரவு !

Monday, November 25, 2013
இலங்கை::புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மீனவர்கள் 15 பேர் ஊர்காவற்துறை நீதிமன்றினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 14ஆம் திகதி கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை நீதிமன்றத்தில் 5 முறை அவர்களுக்கான விளக்கமறியல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று 15 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட 15 பேரும் விரைவில் தமிழகம் திரும்பவுள்ளனர்.

இருப்பினும் இவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் விடுவிக்கப்படவில்லை.

படகுகள் குறித்த வழக்கு டிசம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.    

No comments:

Post a Comment