Monday, November 25, 2013
இலங்கை::புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த வாரம் வடக்கின் எந்தப் பகுதியிலும் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த இடமளிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட ஓர் பயங்கரவாத இயக்கம் எனவும், எனவே இந்த அமைப்பின் நினைவு நிகழ்வுகளை நடாத்துவது சட்ட விரோதமானது எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த அரசாங்கம் தடை விதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புலிகள் பலரை கொலை செய்துள்ளதாகவும் எந்தவொரு நாடும், நினைவு நிகழ்வுகளை நடாத்த அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment