Monday, November 25, 2013

விசா விதி முறைகளை மீறி செயற்பட்ட ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார்!

Monday, November 25, 2013
இலங்கை::விசா விதி முறைகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு தற்சமயம் மிரிஹான முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நோர்வே பிரஜையான (புலிகள் அதரவு) கவிஞர் வி.ஜ.எஸ்.ஜெயபாலன் நாடு கடத்தப்படவுள்ளார்.

இத்தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய திரைப்பட நடிகர் ஜெயபாலன் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா - மாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தனது தாயின்  (புலிகள்)சமாதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற வேளை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் இலங்கை வந்த நோர்வே பிரஜை ஜெயபாலன், விசா விதிமுறைகளை மீறி யாழ்ப்பாணத்தில் (புலிகள் அதரவு) கூட்டங்களை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை வந்த ஜெயபாலன் ஊடகவியலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பல தரப்பினரையும் சந்தித்திருந்தார்...

இலங்கையில் மீண்டும் இனவாத கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் 79 வயதான கவிஞர் ஜெயபாலன் நோர்வேயில் இருந்து புலம்பெயர் புலிகள் அதரவு தமிழர்களால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்!

இலங்கையில் மீண்டும் இனவாத கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் 79 வயதான கவிஞர் ஜெயபாலன் நோர்வேயில் இருந்து புலம்பெயர் தமிழர்களால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக  திவயின பத்திரிகை  தெரிவித்துள்ளது

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜெயபாலன் நேற்று இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

1999 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து நோர்வே சென்ற குடியேறிய ஜெயபாலன், எரிக் சொல்ஹெய்மின் ஆலோசனையின்படி புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்பில் செயற்பட்டதாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.

இவர் கடந்த 9 ஆம் திகதி தனது தாயின்  (புலிகள்) கல்லறையில் அஞ்சலி செலுத்துவதற்காக சுற்றுலா வீசா அனுமதியை பெற்றுக்கொண்டு கொழும்பு வந்ததுடன் யாழ்ப்பாணத்திற்கு சென்றதாக தெரியவந்துள்ளது.

ஜெயபாலன் புலம்பெயர் புலிகள் அதரவு தமிழர்களுக்காக தமிழ் ஊடகவியலாளர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களை அழைத்து கடந்த 18 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

பெரும்பான்மை சிங்களவர்களுக்கு எதிராக முஸ்லிம் மக்களை இணைத்துக் கொண்டு ஆயுதப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் முனைப்புகளை தமிழர்கள் மேற்கொள்ள வேண்டும் என இவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது

யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு சென்று கொண்டிருந்த போது பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment