Monday, November 25, 2013

புலிகள் அமைப்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரசாரப்படுத்துவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை!

Monday, November 25, 2013
இலங்கை::புலிகள் அமைப்பை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரசாரப்படுத்துவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ஊடக சுதந்திரம் என்ற போர்வையில்  புலிகளின் புகழ்பாடுதல், பெருமைபோற்றுதல் சட்டவிரோதமானதென தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு எவரும் நடந்துகொண்டால் சட்ட நடவடிக்கைக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என  பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் எச்சரித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி புலிகளின் மாவீரர் தினமாகும். இதனை அனுஸ்டிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலிகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில் புலிகளின் மாவீரர் தினம் அனுஸ்டிப்பது சட்டவிரோதமான செயல் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment