Monday, November 25, 2013

புலிகளின் மாவீரர் தின அனுஷ்டிப்புக்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது: யாழ்க் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க!

Monday, November 25, 2013
இலங்கை::புலிகளின் மாவீரர் தின அனுஷ்டிப்புக்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது: யாழ்க் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க.
 
புலிகளின் மாவீரர் தின அனுஷ்டிப்புக்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். மாவீரர் தின வார நிகழ்வு நடைபெறும் காலப்பகுதியில் யாழ்ப்பாணம் அமைதியாக காணப்படும் என எதிர்பார்ப்பதாக யாழ்க் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

குழப்ப நிலைமைகள் ஏற்படக் கூடிய சாத்தியம் கிடையாது எனவும் இதனால் அதிகளவில் இராணுவத்தினரை குவிக்க வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகள் தமது வீரர்கள் அல்ல என்பதனை வடக்கு மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு ஆதரவான சிலர் மட்டும் இவ்வாறு குழப்பங்களை விளைவிக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
 

No comments:

Post a Comment