Saturday, November 16, 2013

இளவரசர் சால்ஸ் மற்றும் அவரது பாரியார் கெமிலா ஆகியோர் கொழும்பில் இடம்பெற்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்!

Saturday, November 16, 2013
இலங்கை::பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இளவரசர் சால்ஸ் மற்றும் அவரது பாரியார் கெமிலா ஆகியோர் கொழும்பில்  இடம்பெற்ற பல நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.
 
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு நடாத்தப்படுகின்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்ற வர்த்தக தலைவர்களை இளவரசர் சால்ஸ் இன்று சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
 
இதனை அடுத்து தேசிய அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு சென்றிருந்த இளவரசர் சால்ஸை, கலாசார மற்றும் கலைகள் அமைச்சர் வரவேற்றார்.
 
இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் தேசிய அருங்காட்சியகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், அவர் அவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
 
இதேவேளை, இளவரசர் சால்ஸின் பாரியாரான கெமிலா பாகர், கொழும்பு பொது நூலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டார்.
பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படுகின்ற சித்திரப்போட்டியை பார்வையிட்டதுடன், சிறார்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
கொழும்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2013 ஆம் ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வுக்கு, இளவரசர் சால்ஸின் பாரியார் தலைமை தாங்கினார்..
 
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று கண்டி உட்பட மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்கின்றனர்.
இளவரசர் சார்ள்ஸ் இன்று காலை கண்டி தலதா மாளிகை, அஸ்கிரிய , மல்வத்து பௌத்த பீடங்களுக்கு விஜயம் செய்ததுடன் பேராதனை தாவரவியல் பூங்காவுக்கும் விஜயம் செய்தனர்.
 
இதன் பின்னர் நுவரெலியா பிரதேசத்திற்கும் செல்லும் அவர்கள் அங்குள்ள சில தேயிலை தோட்டங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள், வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் அதிதிகளுக்கான நேற்றிரவு விசேட இராப்போசன விருந்துபசாரம் நடைபெற்றது.
 
பொதுநலவாய அமைப்பின் தலைவியான பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத் சார்பில் முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ், கமிலா பாக்கர் தம்பதியர் இந்த இராப்போசன விருந்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த இராப்போசன விருந்து கொழும்பில் உள்ள பிரதான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
 
பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி கமிலா ஆகிய இருவரும் கண்டியிலுள்ள தலதாமாளிகையில் இன்று சனிக்கிழமை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

சார்ள்ஸ் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தாலும் தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுவது இதுவே முதல் தடவையாகும்.

இவ்விருவரும் கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய மாநாயக்கர்களையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் பிரித்தானிய யுத்தகாலத்தில் மரணமடைந்த பிரித்தானிய வீரர்களை நினைவு கூர்ந்து அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபிக்கும் இருவரும்  அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கண்டி, உடுவத்தகெலயிலுள்ள நினைவு தூபிக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்ற இளவரசர் சால்ஸ், அரச தலைவர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment