Saturday, November 16, 2013

பொதுநலவாயம என்பது சர்வதேச பொலிஸ் அல்ல: இலங்கைக்கு எதிரான எந்தவொரு சர்வதேச விசாரணையையும் அரசாங்கம் எதிர்க்கும்: நிமால் சிறிபால டி சில்வா!

Saturday, November 16, 2013
இலங்கை::பொதுநலவாயம என்பது; சர்வதேச பொலிஸ் அல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு எதிரான எந்தவொரு சர்வதேச விசாரணையையும் அரசாங்கம் எதிர்க்கும் எனவும் மிகவும் தெளிவாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதில் அளித்துள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று சனிக்கிழமை  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற அவைத்தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா இதனை வலியுறுத்தி உள்ளார்..
 
ஐக்கிய நாடுகளின் ஆதரவுடனோ அல்லது ஆதரவின்றியோ இலங்கை எதிராக நடத்தப்படும் எந்த சர்வதேச விசாரணை நகர்வுகளை இலங்கை கடுமையாக எதிர்க்கும் என
அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
 
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுளின் மாநாட்டின் இடையில் ஊடகங்களிடம் பேசும் போதே அமைச்சர் இதனை கூறினார்.
 
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றை நடத்த எந்த நியாயமான காரணங்களும் இல்லை. இலங்கை அழுத்தங்களை பயன்படுத்தும் எனினும் எந்த நாடுகளும் தமது எண்ணப்பாடுகளை இலங்கை மீது திணிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.
 
பொதுநலவாய அமைப்பை குறைமதிப்புக்கு உட்படுத்திவிடக் கூடாது. பொதுநலவாய அமைப்பு ஒரு தன்னார்வ அமைப்பு. அந்த அமைப்பு சர்வதேச பொலிஸ்காரனாக செயற்பட முடியது என்றார்.அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.
 

No comments:

Post a Comment