Sunday, November 17, 2013

தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த (புலி ஆதரவு) ம.தி.மு.க. வக்கீல்கள் மாநாட்டில் தீர்மானம்!

Sunday, November 17, 2013
சென்னை::தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று (புலி ஆதரவு
மனநோயாளிகள்) ம.தி.மு.க. வக்கீல்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
ம.தி.மு.க. வக்கீல்கள் மாநாடு சென்னையில் நேற்று நடந்தது. ம.தி.மு.க. சட்டத்துறை செயலாளர் தேவதாஸ் தலைமை தாங்கினார்.
 
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும். சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தை உடனடியாக கட்ட வேண்டும். சென்னை உயர்நீதி மன்றத்துக்கு தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
 
புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு தனி ஈழம் அமைய வேண்டும். அதற்கு உலக அளவில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
இந்த மாநாட்டில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர்  (புலி ஆதரவு மனநோயாளி)வைகோ நேற்று மாலை பேசினார்.

No comments:

Post a Comment