Saturday, November 16, 2013
இலங்கை::பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகைதந்துள்ள பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்றிரவு அலரிமாளிகையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
பிரதமர் கமரூன் யாழ்ப்பாணத்திற்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்புக்கு திரும்பிய நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது
இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,2013 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த விதம் குறித்து பிரதமர் கமரோன் திருப்தி வெளியிட்டார்.
சிலர் முன்மொழிந்ததைப் போன்று இந்த மாநாட்டை பகிஷ்கரிக்கும் எண்ணம் தனக்கு இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை செனல் 4 ஊடகவியலாளர்கள் இலங்கையின் போர்க் குற்றம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டேவிட் கமரூன் சுயாதீச விசாரணை இல்லையேல் சர்வதேச விசாரணை என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
வடக்குக்கு அவர் மேற்கொண்ட விஜயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரித்தானிய பிரதமர் நான்கு வருடங்களுக்கு முன்னர் மோதல் நிறைவுக்கு வந்;ததைத் தொடர்ந்து பெருமளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
வட மாகாண சபைக்கு தேர்தல்களை நடத்தியமை நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு மிகச் சாதகமான நடவடிக்கை என வர்ணித்தார். எனினும், இடம்பெயர்ந்தவர்கள், காணிப் பிரச்சினைகள் வட மாகாணத்தில் இராணுவத்தினரின் பிரசன்னம் மற்றும் புதிதாக தெரிவு செய்யப்பட்ட வட மாகாண சபைக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்தல் போன்ற விடயங்களுடன் தொடர்புபட்ட பல்வேறு விடயங்கள் இன்னும் தீர்க்கப்படவேண்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள்குடியேற்றம், புனர்;வாழ்வு மற்றும் மோதலின்போது சேதத்திற்குள்ளான உட்கட்டமைப்பு புனர்நிர்மாணம் போன்ற விடயங்களில் பாரியளவு பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது என விபரித்தார்.
அரசியல் விவகாரங்களில் இணக்கப்பாட்டை எட்டும் வகையில் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் தீர்வொன்றைஎட்டுவதற்கும் சம்பந்தப்பட்ட எல்லா கட்சிகளையும் உள்ளடக்கிய ஒரு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தெரிவுக் குழுவே இந்த நோக்கத்திற்கான சிறந்த தளமாகும்' என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மோதல் நிறைவுக்கு வந்து நான்கு வருடங்களே ஆகும் நிலையியல் எல்லா பாரிய சவால்களையும் வெற்றி கொள்வதற்கு இன்னும் காலம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக், இலங்கைக்கான பிரித்தானிய உயரிஸ்தானிகர் ஜோன் ரங்கிங் ஆகியோரும் பிரதமர் கெமரோனுடன் பிரசன்னமாகியிருந்தனர்.
வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹேக், இலங்கைக்கான பிரித்தானிய உயரிஸ்தானிகர் ஜோன் ரங்கிங் ஆகியோரும் பிரதமர் கெமரோனுடன் பிரசன்னமாகியிருந்தனர்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்;தன, பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுணுகம, பிரித்தானியாவுக்கான இலங்கை உயரிஸ்தானிகர் கலாநிதி கிறிஸ் நோனீஸ், ஜனாதிபதி செயலகத்
தலைவர் காமினி செனரத் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்...
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்: டேவிட் கமரூன்!
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் மாதம் வரையில் கால அவகாசம் வழங்குவதாகவும் அவ்வாறு சுயாதீன விசாரணை நடத்த தவறும் பட்சத்தில் சர்வதேச ரீதியான விசாரணைக்கு இலங்கை முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது இலங்கை மீதான சர்வதேச விசாரணை குறித்து அழுத்தம் கொடுக்கப்படும் என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
நேற்று (15.11.13) வடக்கிற்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசிய போதே பிரித்தானிய பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு நிலைமைகள் குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுபோர் நிறைவின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டியது எனத் தெரிவித்த அவர குறிப்பாக வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டமை மிகச் சாதகமான ஓர் முன்நகர்வு என சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும் இடம்பெயர்ந்த மக்கள் பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகள், வடக்கின் இராணுவ பிரசன்னம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைக்கு அதிகாரங்களை பகிர்வது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் டேவிட் கமரூன் முன்வைத்த கருத்துக்கள் அனைத்தையும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை செனல் 4 ஊடகவியலாளர்கள் இலங்கையின் போர்க் குற்றம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டேவிட் கமரூன் சுயாதீச விசாரணை இல்லையேல் சர்வதேச விசாரணை என்ற தீர்மானத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment