Friday, November 29, 2013

யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சி:பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Friday, November 29, 2013
இலங்கை::யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை சீர்குலைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சித்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
திட்டமிட்ட அடிப்படையில் நல்லிணக்க முனைப்புக்களை கூட்டமைப்பு புறக்கணித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுமென்றே மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தி, அரசாங்கத்தையும் படையினரையும் ஆத்திரமடையச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளுக்கு முன்னதாக வடக்கில் குழப்பங்களை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும்
புலிகளின் உத்தரவுகளை கூட்டமைப்பு ஏற்றுச் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் வரையிலும் பிரபாகரனின் ஈழக் கோரிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அல் கய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடனுக்கு அஞ்சலி செலுத்த அமெரிக்கா அனுமதிக்குமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பய்ஙகரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment