Sunday, November 24, 2013
லண்டன்::லண்டனில் இருந்து ருமேனியா நாட்டுக்குச் சென்ற சனல் 4 இன் ஆவணப்படத் தயாரிப்பாளர் (புலி பினாமி) கெலும் மக்ரே, அங்கு ஐ.நாவின் அனுசரணையோடு நேற்று முன்தினம் சுமார் 200 பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னிலையில் ‘நோ பயர் ஸோன்” ஆவணப்படத்தை திரையிட்டுள்ளார்.
ருமேனியா நாட்டின் தலைநகரில் உள்ள பல்கலைககழகம் ஒன்றில், அரசியல் விஞ்ஞானம் பயிலும் மாணவர்களுக்கு மத்தியிலேயே இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது.
பல மாணவர்கள் இதனை பார்த்து அழுதுள்ளதாகவும், அவர்கள் இலங்கையில் நடப்பதை முதல் முறையாக உணர்ந்துள்ளதாகவும் அங்கு பேசிய கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.
மேலும், ஐ.நாவின் மனித உரிமை அமைப்பு ஆவணப்படத்தை இங்கு காண்பிக்க மிகவும் உதவியதாக தெரிவித்துள்ள கெலும் மக்ரே, ருமேனிய நாட்டின் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் தான் இந்த ஆவணப்படத்தை போட்டுக் காட்டவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ருமேனியா நாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையே, இலங்கையைப் பற்றிய விழிப்புணர்வு ஒன்றை ஏற்படுத்தவே அவர் தற்போது அந்த நாட்டிற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment