Sunday, November 24, 2013

இந்தியா, இலங்கை மீனவர் சங்க தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்: த்திய இணையமைச்சர் நாராயணசாமி!

Sunday, November 24, 2013
சென்னை::மத்திய இணையமைச்சர் நாராயணசாமி நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:  இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பதற்காக மத்திய அரசு இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை யில் சமீபத்தில் 34 மீனவர் கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
மீதியுள்ள மீனவர் களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. படகுகளை விடுவிப்பது பற்றி இந்திய வெளியுறவு துறை அமை ச்சர் சல்மான் குர்ஷித், காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கை சென்றிருந்தபோது இலங்கை அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். விரைவில் படகுகள் விடுவிக்கப்படும்.
 
இந்திய மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வரும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண  டிசம்பர் மாதம் இரு நாட்டு மீனவர் சங்க தலைவர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற் பாடு செய்துவருகிறது. பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்தது இலங்கை அரசுக்கு பேரிடியாக உள்ளது. இதனால் இலங்கை அரசு கலக்கத் தில் இருக்கிறது.

No comments:

Post a Comment