Sunday, November 24, 2013
இலங்கை::ஊடகங்களுக்கு எதிராக தடைகள் விதிக்கப்படவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.
ஏ.எப்.பீ ஊடகவியலாளர்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், இவ்வாறான எவ்விதமான தடைகளும் விதிக்கப்படவில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பு கிடையாது எனவும், ஏதேனும் அசௌகரியங்கள் நடந்திருந்தால் அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த சின்னங்கள் மற்றும் பொது இடங்களை புகைப்படம் பிடிக்கவும், வீடியோ படமெடுக்கவும் எவ்வித தடைகளும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊடகவியலளார்களை வரவேற்பதாகத அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment