Tuesday, November 19, 2013
இலங்கை::நிந்தவூர் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் முழுமையான ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.இதன்போது நிந்தவூர் பிரதான வீதியில் மக்கள் அங்கும் இங்குமாக திரண்டு நின்று டயர்கள், கற்கள் மற்றும் மரக் குற்றிகளைப் போட்டு வீதித் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பல பொலிஸ் நிலையங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான பொலிஸார் வரவழைக்கப்பட்டு- தடைகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்போது பொலிஸார் மீது பொது மக்கள் கல்வீச்சு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மக்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இந்த மோதலில் சில பொலிசாரும் பொது மக்களும் காயமடைந்துள்ளனர். இதன்போது பொதுமக்களில் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதனால் நிந்தவூர் பிரதேசத்தில் தற்போது பெரும் பதற்றம் நிலவுகிறது.
நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம மனிதர்கள் விடயத்தில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட பக்க சார்பான நடவடிக்கைகளைக் கண்டித்தே இந்த உக்கிரமான ஹர்த்தால் இடம்பெறுகிறது.

No comments:
Post a Comment