Wednesday, November 20, 2013
சென்னை::தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (19.11.2013) தலைமைச் செயலகத்தில், புதிதாக தோற்றுவிக்கப்பட்ட திருப்பூர் மாநகரக் காவல் ஆணையரகத்தை காணொலிக் காட்சி மூலமாகத் துவக்கி வைத்தார்கள்.
திருப்பூர் மாநகரத்தில் மக்கள்தொகை பெருக்கத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழிலாளர்கள் இடம்பெயர்வால் ஏற்படும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு திருப்பூர் மாநகரத்திற்கு தனியாக ஒரு காவல் துறை ஆணையர் அலுவலகம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்கள். அந்த அறிவிப்பிற்கேற்ப, திருப்பூர் மாநகரத்திற்கு புதிய காவல் துறை ஆணையர் அலுவலகம் அமைத்திடும் வகையில், 536 பணியிடங்களை உருவாக்கிட 17 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயும், அலுவலகப் பயன்பாட்டிற்கான உபகரணங்களுக்கு 19 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார்கள்.
புதிதாக உருவாக்கப்படும் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையரகமானது, அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், வீரபாண்டி, ஊத்துக்குளி, அனுப்பர்பாளையம் போக்குவரத்து, திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் மத்திய காவல் நிலையம் ஆகிய காவல் நிலையங்களின் எல்லைகளை உள்ளடக்கி மொத்தம் ஏழு காவல் நிலையங்கள், மூன்று போக்குவரத்து காவல் நிலையங்கள், இரண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் ஒரு மத்திய குற்றப்பிரிவு ஆகியவை புதிய ஆணையரகத்தின் கீழ் செயல்படும்.
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட திருப்பூர் மாநகரக் காவல் ஆணையரகத்தை தமிழ்நாடு முதலமைச்சர்ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக நேற்று துவக்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில், அரசு தலைமைச் செயலாளர்ஷீலா பாலகிருஷ்ணன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் நிரஞ்சன் மார்டி, காவல் துறை தலைமை இயக்குநர் கே. ராமானுஜம், காவல்துறை தலைமை இயக்குநர் (குற்றம்) நரேந்திர பால் சிங், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டி.கே. இராஜேந்திரன், காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் (குற்றம் / சிபிசிஐடி) கரன் சின்கா, சென்னை பெருநகர காவல் துறை ஆணையர் எஸ். ஜார்ஜ்ஞு, காவல்துறை தலைவர் (உள்நாட்டு பாதுகாப்பு)
பி.கண்ணப்பன், காவல்துறை தலைவர் (சிபிசிஐடி)மகேஷ் குமார் அகர்வால், மற்றும் காவல் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஜ் ஷ்
.jpg)
No comments:
Post a Comment