Wednesday, November 20, 2013

இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதாக ஈ.வி.கே.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்!

Wednesday, November 20, 2013
சென்னை::இலங்கைப் பிரச்சினையில் கருணாநிதி முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதாக ஈ.வி.கே.கே.எஸ்.இளங்கோவன் விமர்சித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 96_வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
 
இதையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி படத்திற்கு, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
 
அப்போது அனைவரும் தேசிய ஒருமைப்பாடு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
 
நிகழ்ச்சியில் முன்னாள் மாநில தலைவர்கள் <.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசு, ஆரூண் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏக்கள் யசோதா வசந்தகுமார், பலராமன், மகளிர் காங்கிரஸ் தலைவர் சாய்லட்சுமி, சக்தி வடிவேல், தணிகாசலம், நம்பி, சிரஞ்சீவி, ஆதிநாராயணன், சைதை ரவி, மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
முன்னதாக யானைகவுனி, புரசைவாக்கம் டானா தெரு ஆகிய இடங்களில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கும் மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் ஈ..வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:_
 
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கு இந்தியா அளிக்கும் நிதிஉதவி முறையாக கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த 'டெசோ' கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி, காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியாவில் இருந்து ஒரு துரும்புகூட செல்லக்கூடாது. இலங்கையுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறினார்.
 
இலங்கையுடன் நட்புறவு இல்லாவிட்டால், அங்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும். முன்னுக்குப்பின் முரணாக அவர் கருத்து தெரிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்?
 
இலங்கை வாழ் தமிழர்கள் மீது இந்திய அரசுக்கு உண்மையான அக்கறை உள்ளது. காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்திய பிரமரும் சென்று இருந்தால், இங்கிலாந்து பிரதமரை விட அதிக அக்கறையுடன் தமிழர்கள் துயரங்களை நேரில் கண்டறிந்து இன்னும் பல நன்மைகள் கிடைக்க வழிவகை செய்திருக்க முடியும்.
 
ஆனால், பிரதமரை போகவிடாமல் தடுத்தது கருணாநிதிதான். இப்போது இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழ் கூட்டமைப்பு சார்பில் முதல்_மந்திரியாக இருக்கும் விக்னேஷ்வரனுக்கு கூடுதல் உரிமைகளை பெற்றுத்தரும் கடமை இந்தியாவுக்கு உள்ளது. என்று கூறினார். இளங்கோவன்.

No comments:

Post a Comment