Thursday, November 14, 2013

பிரதமர் மன்மோகன் சிங் உறுதி: இலங்கை சிறையிலுள்ள தமிழக, புதுச்சேரி மீனவர்களை மீட்க விரைவில் நடவடிக்கை!

Thursday, November 14, 2013
புதுடெல்லி::இலங்கை சிறையிலுள்ள தமிழக மற்றும் புதுவை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். தன்னை சந்தித்த தமிழகம், புதுச்சேரி மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளார். எதிர்காலத்தில் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன் பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும் துப்பாக்கியால் சுடப்படுவதும் தற்போது வாடிக்கையாகிவிட்டது.

இதனையடுத்து இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அட்டூழியத்தை கண்டித்து பிரதமரிடம் முறையிட மீனவ சங்கங்கள் முடிவு செய்தன. அதன் படி தமிழகம், புதுச்சேரி மீனவர் சங்க பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து பேசினர். அப்போது, இலங்கை சிறையிலுள்ள தமிழக மற்றும் புதுவை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் பிரதமரிடம் வலியுறுத்தினர்.

மேலும், எதிர்காலத்தில் மீனவர்கள் பாதுகாப்புடன் மீன் பிடிக்க நடவடிக்கைகள் எடுக்க கோரியும் அவர்கள் பிரதமரிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து, இலங்கை சிறையிலுள்ள தமிழக மற்றும் புதுவை மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார். தன்னை சந்தித்த தமிழகம், புதுச்சேரி மீனவர் சங்க பிரதிநிதிகளிடம் பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

தமிழகம், இலங்கை மீனவர்கள் டிசம்பரில் பேச்சுவார்த்தை மத்திய அமைச்சர் உறுதி!

காரைக்கால் வடக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமுருகன் கூறியதாவது:புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ இளங்கோ, காரைக்கால், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் உள்ளிட்ட 11 பேர், மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தலைமையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை நேரில் சந்தித்து மீனவர்கள் பிரச்னை தொடர்பாக பேசினர். இலங்கை சிறையில் வாடும் தமிழகம் மற்றும் காரைக்காலை சேர்ந்த 81 மீனவர்களையும், இவர்களது படகுகள் மற்றும் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட மீனவர்களின் 41 படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தினர்.அப்போது, காமன்வெல்த் மாநாடு முடிவுக்கு பிறகு அனைத்து மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், மேலும் இலங்கை&தமிழக மீனவர்கள் வரும் டிசம்பரில் தமிழக அரசு ஒப்புதலோடு சந்தித்து பேசி, எந்த பகுதியில், எந்த காலத்தில் மீன்பிடிக்கலாம் என உடன்படிக்கை செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். இவ்வாறு எம்.எல்.ஏ திருமுருகன் கூறினார்.

No comments:

Post a Comment