Thursday, November 14, 2013
இலங்கை::காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கொழும்பு வந்துள்ள, இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங்குடன், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்துப் பேச்சு நடத்தியு
ள்ளது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சுரேஸ் ஆகியோரைக் கொண்ட குழு, இந்திய வெளிவிவகாரச் செயலரை சந்தித்தது.
இதன்போது, இலங்கையின் தற்போதைய நிலைமை, வடக்கிலுள்ள சூழ்நிலைகளை, வலி-வடக்கு, சம்பூர் மக்களின் பிரச்சினைகள், உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்திய வெளிவிவகாரச் செயலருக்கு விளக்கிக் கூறியதாக, இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தச் சந்திப்பு பயனுள்ள வகையில் அமைந்ததாகவும், தமது கவலைக்குரிய விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் எடுத்துக் கூறியதாகவும், இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment