Thursday, November 14, 2013

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு: சாஸ்திரிபவனில் மாணவர்கள் முற்றுகை- 60 பேர் கைது!

Thursday, November 14, 2013
பெரம்பூர்::இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தது. ஆனால் பலத்த எதிர்ப்பையும் மீறி, வெளியுறவு துறை மந்திரி சல்மான்குர்ஷித் இலங்கை சென்றுள்ளார்.
இதையடுத்து அவரது பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போராட்டங்கள் நடந்தன.
சென்னை சாஸ்திரி பவன் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களும் மாணவர்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

15 பெண்கள் உள்பட 60 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 60 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 150 பேர் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையடுத்து அங்கு 100–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதில் வடசென்னை மாவட்ட செயலாளர் கபிலன், பெரம்பூர் பகுதி செயலாளர் சிறுத்தை வளவன், செந்தமிழன், கல்தூண்ரவி, மின்ட் முனியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment