Thursday, November 14, 2013
இலங்கை::இலங்கை அரசுக்கும் நாட்டுக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு பொய்ப்பிரசாரங்களை புலி ஆதரவு சனல் 4 தொலைக்காட்சி மேற்கொண்டு வருவதாகவும் கூறி, ஆகவே கலம் மெக்ரே உட்பட அந்த ஊடகத்தின் செய்தியாளர்களை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கோரி வவுனியாவில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஏ9 வீதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஆண்களும் பெண்களுமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சனல் 4 ஊடகத்திற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர் வவுனியா மன்னார் வீதிச் சந்திக்கருகில் யாழ் வீதியில் ஆரம்பித்த இந்த ஆர்ப்பாட்டம் வவுனியா அரச செலயக வாயில்வரை சென்றது.
ஆர்ப்பாட்டக்காரர்களை ஏ9 வீதியில் முன்னேறிச் செல்லவிடாமல் பொலிசார் தடுத்து நிறுத்தினர். எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களும் முண்டியடித்து முன்னேற முயற்சித்தனர். எனினும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.
சனல் 4 ஊடகவியலாளர்கள் வட பகுதிக்கு வரக் கூடாது எனவும், அவர்களை அரசாங்கம் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் எனக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, சனல் ஊடகவியலாளர்களை வெளியேற்று, எமது ஒற்றுமையை குலைக்காதே, சனல் 4 வேண்டாம் போன்ற வாசங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
சனல் 4 ஊடகவியலாளார்கள் வட பகுதிக்கு செல்லவுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் ஏ - 9 வீதியின் போக்குவரத்து சில மணி நேரம் பாதிப்படைந்தது.
செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது!
புலி ஆதரவு செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு எதிராக கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
வேன் சாரதி ஒருவரால் கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாடு இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி வேனில் வந்த செனல் 4 ஊடகவியலாளர்கள் அதற்கான வாடகை பணத்தை கொடுக்கவில்லை எனத் தெரிவித்தே வேன் சாரதி முறைப்பாடு செய்துள்ளார்.
கொழும்பில் இருந்து ரயிலில் வவுனியா சென்ற செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு அநுராதபுரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதனால் அநுராதபுரத்தில் இருந்து செனல் 4 ஊடகவியலாளர்கள் வேனில் கொழும்பு நோக்கிச் சென்றனர். நேற்று (13) இரவு தம்புள்ளையில் தங்கியிருந்த இவர்கள் இன்று காலையே கொழும்பு வந்தடைந்துள்ளனர்.
எனினும் அவர்கள் பயணித்த வேனுக்கான 30,000 ரூபா வாடகை பணம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து அதன் சாரதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.jpg)

No comments:
Post a Comment