Saturday, November 2, 2013

இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பாக பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்று பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்: திராவிடக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது!

Saturday, November 02, 2013
சேலம்::சேலம் மாவட்டத்தில் வணிக வரித்துறை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு நடத்திய சம்பவம் தொடர்பாக திராவிடக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நள்ளிரவு 2.15 மணிக்கு போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி கூறும்போது, வரும் செவ்வாய்க்கிழமை கட்சி கூட்டத்தில் கோணிப்பையில் தீ வைத்து வருமான வரி அலுவலகத்தில் வீசிய இந்த சம்பவம் குறித்து முடிவு எடுக்கப்படவுள்ள நிலையில் போலீசார் கைது செய்துவிட்டனர் என்றும், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பாக பிரதமர் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment