Saturday, November 2, 2013

நாட்டுக்காக தம்மை தியாகம் செய்த படைவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

Saturday, November 02, 2013
இலங்கை::நாட்டுக்காக தம்மை தியாகம் செய்த படைவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதாப் பிரிவின் தலைவி திருமதி.அயோமா ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ‘பூஜநியை ஒப- மௌ பிய உபகார' எனும் வைபவம் கொழும்பு டவர் மண்டபத்தில் (ஒக்.31) இடம்பெற்றது.
 
இந்நிகழ்வானது.இராணுவத்தின் சேவா வனிதா பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்டதுடன் 135 இறந்த யுத்தவீரர்களின் பெற்றோர்களுக்கு உயர் விருதான ‘பரம வீர விபூசனய’ வீரவிக்ரம விபூசனய’ ரனவிக்ரம பதக்கம’ ‘ரன சூர பதக்கம’ விருதுகளும் சான்றிதழ்களும் பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
 
இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் தயாரத்நாயக்க மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையின் பிரதானி மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இராணு சேவா வனிதாப் பிரிவின் தலைவி திருமதி. தமயந்தி ரத்நாயக்க மற்றும் பலர் இவ் வைபவத்தில் கலந்துகொண்டனர்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment