Friday, November 22, 2013
இலங்கை::சென்னை::கைது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக–இலங்கை மீனவர்கள் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜி.கே.வாசன் கூறினார்.
இன்று காலை சுவாமிமலை வந்தார். சுவாமிமலை கோவிலில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை
மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. உலக மீனவர் தினத்தன்று இச்சம்பவம் நடைபெற்றது வருத்தமளிக்கிறது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித்தை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளேன். டிசம்பர் 3–வது வாரத்திற்குள் தமிழக–இலங்கை மீனவர்கள் ஒருசேர பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான்குர்ஷித்திடம் தெரிவித்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமண விழாவில் ஜி.ஆர். மூப்பனார், மாவட்ட தலைவர் ராஜாங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், கும்பகோணம் நகர தலைவர் சங்கர், சுவாமிமலை பேரூராட்சி கவுன்சிலர் எஸ்.சங்கர், கும்பகோணம் நகராட்சி கவுன்சிலர்கள் முருகன், கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment