Friday, November 22, 2013
இலங்கை::பிராந்திய கடல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயும் ‘கோல் டயலொக் – 2013’ என்ற உயர் மட்ட மாநாடு எதிர்வரும் நவம்பர் 25 ஆம் திகதி காலித் துறைமுக நகரில் ஆரம்பமாகிறது. ‘இந்து சமுத்திரத்தில் புதிதாக உருவாகும் கடல்சார் முறைமைகள்’ என்ற தொனிப் பொருளில் இரண்டு நாட்கள் (நவ.25 மற்றும் 26) நடைபெறவுள்ளது.
இலங்கை கடற்படை, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த உயர் மட்ட பாதுகாப்பு மாநாட்டை பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளதுடன் சிறப்புரையையும் நிகழ்த்தவுள்ளதுடன் ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க அவர்களும் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
மேலும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ஜயநாத் கொலம்பகேயினால் வரவேற்பளிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment