Friday, November 22, 2013

அமேரிக்க இராணுவ யுத்த கல்லூரியினது கண்காட்சியில் இலங்கை!

Friday, November 22, 2013
இலங்கை::"Know Your World" எனும் தொனிப் பொருளில் பொதுக்கண்காட்சி ஒன்று அமேரிக்க யுத்த கல்லூரியினால் அண்மையில் (நவ.07) பென்சில்வேனியாவில் இடம் பெற்றது.
 
வாஷிங்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கையும் இக்கண்காட்சியில் பங்கு பற்றி நாட்டின் கலாசார, உணவு, மற்றும் உல்லாசத்துறை போன்ற விடயங்களை வெளிக்காட்டக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டது.
 
பார்வையாளர்கள் முதற்தடவையாக நேரடியாக இலங்கையின் சுவையான கொக்கீஸ், பாற்சோறு, பால் டொபி, மற்றும் தலகுலி போன்ற உணவுகளை சுவைப்பதற்குறிய வாய்ப்பைப் பெற்றுக் கொண்டனர். அவர்களுள் பலர் இலங்கையின் சூடான தேனீர் சுவையை பாராட்டினார்கள். பிரசுரங்கள், பதாதைகள் மற்றும் வெளியீடுகள் மூலம் உல்லாசத்துறை தொடர்பான தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
67 சர்வதேச நாடுகளைக் கொண்ட 77 உறுப்பினர்களால் "Know Your World" 2014 ஆம் ஆண்டுக்கான வகுப்பு அமேரிக்க யுத்த கல்லூரியினால் ஆரம்பிக்கப்பட்டது.
 
இந்நிகழ்ச்சியானது சர்வதேச அதிகாரிகளுக்கு அமேரிக்க யுத்த கல்லூரியில் தமது நாடுகளின் கலாசாரம், பாரம்பரியம் போன்றவற்றை அமேரிக்க சமூகத்தினருக்கு முன்வைக்கக்கூடிய சந்தர்ப்பமாக அமைந்தது. இக்கல்லூரியானது அமேரிக்காவிலே உயர் இராணுவ கல்வி நிலையமாகத் திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment