Friday, November 22, 2013
இலங்கை::மாத்தறை, கம்புறுபிட்டிய பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், அவரின் மனைவியும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
மறைத்து வைத்திருந்த துப்பாகியொன்றை தேடுவதற்காக சென்றிருந்த சந்தர்ப்பத்தில், சந்தேகநபர் கைத்துப்பாக்கியால் பொலிஸாரை நோக்கி சூடு நடத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதனையடுத்து பொலிஸார் நடத்திய பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment