Friday, November 22, 2013
இலங்கை::தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளது குடுமிப்பிடி சண்டை மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளது.
பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமரால் சபையில் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றபோது தமிழரசுக்கட்சி மற்றும் ஈபிடிபி உறுப்பினர்கள் 10 பேர் எதிராகவும் எஞ்சிய ஒன்பது பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் மேலதிக ஒரு வாக்கினால் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளது. குறித்த பிரதேச சபையினது தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் நாடாளுமன்ற அங்கத்தவர் சுரேஸ் பிறேமச்சந்திரனது கட்சியான ஈபிஆர்எல்எவ் இனை சேர்ந்தவராவார்.
இந்த வரவு செலவுத்திட்டம் சபை உறுப்பினர்களின் ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமல் தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டமையினாலேயே இதனை தாம் நிராகரித்ததா தமிழரசு கட்சியினர் தெரிவித்துள்ள போதும் வடமாகாணசபை அங்கத்தவர்கள் சிலரது தலையீடு மற்றும் ஆலோசனையின் பேரிலேயே தமிழரசுக்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளது குடுமிப்பிடி சண்டை மீண்டும் களை கட்டத் தொடங்கியுள்ளதா என்ற கேள்விகள் யாழ்ப்பாணத்தில் எழுந்துள்ளன. இதன் முக்கிய எதிரொலியாக கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வலி. கிழக்கு பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக ஒரு வாக்கினால் தோல்வியடைய வைக்கப்பட்டுள்;ளது.
பிரதேச சபையின் 2014ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமரால் சபையில் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றபோது தமிழரசுக்கட்சி மற்றும் ஈபிடிபி உறுப்பினர்கள் 10 பேர் எதிராகவும் எஞ்சிய ஒன்பது பேர் ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் மேலதிக ஒரு வாக்கினால் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளது. குறித்த பிரதேச சபையினது தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் நாடாளுமன்ற அங்கத்தவர் சுரேஸ் பிறேமச்சந்திரனது கட்சியான ஈபிஆர்எல்எவ் இனை சேர்ந்தவராவார்.
இந்த வரவு செலவுத்திட்டம் சபை உறுப்பினர்களின் ஆலோசனைகளை கருத்திற் கொள்ளாமல் தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டமையினாலேயே இதனை தாம் நிராகரித்ததா தமிழரசு கட்சியினர் தெரிவித்துள்ள போதும் வடமாகாணசபை அங்கத்தவர்கள் சிலரது தலையீடு மற்றும் ஆலோசனையின் பேரிலேயே தமிழரசுக்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளதாக கூறப்படுகின்றது.

No comments:
Post a Comment