Friday, November 22, 2013
இலங்கை::இலங்கையின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமரின் அணுகுமுறையை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அதிகாரி ஒருவரை கோடிட்டு இந்த செய்தியை இக்கோனொமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் அணுசரணையில் சர்வதேச விசாரணைகளின் அவசியத்தை பிரித்தானிய பிரதமர் தமது விஜயத்தின் போது வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில் கமரூனை போன்று இலங்கைக்கு சென்று மேற்கொண்ட நடவடிக்கைகளை இந்தியா விரும்பவில்லை. அது இந்திய பாணியும் அல்ல என்று இந்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது இந்தியாவின் பேச்சுவார்த்தை மூலமான நடைமுறைகளையும் பாதிக்கும் என்று இந்திய அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்..
இலங்கை குறித்த பிரித்தானியாவின் அணுகுமுறை குறித்து இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனின் அணுகுமுறை பாதக விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடுமென இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் சர்வதேச விசாரணைகளை நடத்த நேரிடும் என கமரூன் இலங்கையில் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கண்ணாடி வீடுகளில் இருந்து கொண்டு கல் எறியக் கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதற்கு பதிலளித்திருந்தார்.
குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவ
ர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, இலங்கை விவகாரத்தில் இந்தியா பிரித்தானியாவை பின்பற்றாது என இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிராந்திய வலய நாடு என்ற ரீதியில் இந்தியா, இலங்கை விவகாரத்தில் வித்தியாசமான அணுகுமுறைகளை பின்பற்றும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறான வழிமுறைகளை இலங்கை விவகாரத்தில் பின்பற்ற வேண்டும் என்பதனை இந்தியா அறிந்து வைத்துள்ளது எனவும் அந்த வழிமுறைகளே பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்காமை காரணமாக இலங்கையுடனான உறவுகளில் பாதிப்பு ஏற்படப் போவதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவும் இலங்கையும் திடீரென முரண்பட்டு விலகிச் செல்லக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:
Post a Comment