Saturday, November 2, 2013

லாஸ் ஏஞ்சலஸ் விமான நிலையத்தில் மர்ம மனிதன் துப்பாக்கி சூடு: விமானங்கள் ரத்து - ஒருவர் பலி!

 

Saturday, November 02, 2013
நியூ யார்க்::அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மர்ம மனிதன் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் பலியானார்.

இதனையடுத்து, புறப்பட இருந்த விமானங்களில் அமர்ந்திருந்த பயணிகள் அனைவரும் பஸ்களின் மூலம் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இரண்டாவது மற்றும் மூன்றாம் முனையங்களில் இருந்த மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டில் விமான நிலைய போக்குவரத்து பாதுகாவலர் ஒருவர் பலியானதாகவும் மேலும் சிலர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கியால் சுட்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம மனிதனை வளைத்துப் பிடித்த போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment