Saturday, November 02, 2013
சென்னை::இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் அல்லது வெளிவிவகார அமைச்சர் பங்கேற்க வேண்டும் என இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை மேற்கோள்காட்டி இந்திய முன்னாள் மத்திய அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளதாக “தி ஹிந்து” குறிப்பிட்டுள்ளது.
இலங்கை தமிழர்களின் நலன் காக்கவும், அவர்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதற்காவும் இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்பது தனது தனிப்பட்ட கருத்தாகும் எனவும் இளங்கோவன் கூறியுள்ளார்.
அத்துடன் இந்தியா – இலங்கை இடையே நல்லுறவு நிலவவேண்டும் என்பதுடன், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் இடம்பெறுகின்ற சீரமைப்பு பணிகளை பார்வையிடவும், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கும் இந்த பயணம் உதவியாக இருக்குமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment