Saturday, November 02, 2013
புலிகளின் ஊடகவியலாளராகவும், நடிகை மற்றும் பாடகராகவும் இருந்த இசைப்பிரியா எனப்படும் ஷோபா, இறுதியுத்த நேரத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்படும் காணொளியை நேற்று செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.
இதில் சகதி நிறைந்த ஒரு பகுதியில் இருந்து இசைப் பிரியாவை இராணுவ துருப்பினர் ஒருவர் அழைத்துச் செல்லப்படுவது காண்பிக்கப்படுகிறது.
அத்துடன் இராணுவத்தினர் இசைப்பிரியாவை, புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வியான துவாரகா என்று கருதி கேள்வி எழுப்புவதும், தாம் அவரில்லை என்று இசைப்பிரியா மறுப்பதும் ஒலிப்பதிவாகியுள்ளன.
ஏற்கனவே இசைப்பிரியா சடலம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருந்த நிலையில், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நேற்று செனல் 4 தமது காணொளியில் அறிவித்திருந்து.
எனினும் இது இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த காணொளியின் இறுதியில் கருத்து வெளியிடும் காணொளி தயாரிப்பாளரான கெலம் மெக்கரே, இனியாவது இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் கலந்துக் கொள்வது குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமது நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்” என்று கோரி இருந்தார்.
இதன் மூலம், இந்த காணொளி தயரிக்கப்பட்டமைக்கான காரணம் என்னவென்று வெளிப்பட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செனல் 4 தொலைக்காட்சி ஏற்கனவே இவ்வாறான காணொளிகளை போலியாக சித்தரித்து வெளியிட்டிருப்பதாகவும், இவை அனைத்தும் இலங்கையின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை::இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இந்தியா உள்ளிட்ட நாடுகளை புறக்கணிக்க செய்யும் நோக்கிலேயே, செனல் 4 தொலைகாட்சி தமது புதிய காணொளியை வெளியிட்டிருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
புலிகளின் ஊடகவியலாளராகவும், நடிகை மற்றும் பாடகராகவும் இருந்த இசைப்பிரியா எனப்படும் ஷோபா, இறுதியுத்த நேரத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்படும் காணொளியை நேற்று செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.
இதில் சகதி நிறைந்த ஒரு பகுதியில் இருந்து இசைப் பிரியாவை இராணுவ துருப்பினர் ஒருவர் அழைத்துச் செல்லப்படுவது காண்பிக்கப்படுகிறது.
அத்துடன் இராணுவத்தினர் இசைப்பிரியாவை, புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வியான துவாரகா என்று கருதி கேள்வி எழுப்புவதும், தாம் அவரில்லை என்று இசைப்பிரியா மறுப்பதும் ஒலிப்பதிவாகியுள்ளன.
ஏற்கனவே இசைப்பிரியா சடலம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருந்த நிலையில், இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதன் பின்னர் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நேற்று செனல் 4 தமது காணொளியில் அறிவித்திருந்து.
எனினும் இது இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் சித்தரிக்கப்பட்ட காட்சிகள் என்று, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த காணொளியின் இறுதியில் கருத்து வெளியிடும் காணொளி தயாரிப்பாளரான கெலம் மெக்கரே, இனியாவது இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் கலந்துக் கொள்வது குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் தமது நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்” என்று கோரி இருந்தார்.
இதன் மூலம், இந்த காணொளி தயரிக்கப்பட்டமைக்கான காரணம் என்னவென்று வெளிப்பட்டிருப்பதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
செனல் 4 தொலைக்காட்சி ஏற்கனவே இவ்வாறான காணொளிகளை போலியாக சித்தரித்து வெளியிட்டிருப்பதாகவும், இவை அனைத்தும் இலங்கையின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment