Wednesday, November 13, 2013

பொதுநலவாய மாநாட்டுக்கு அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் பங்கேற்கப் போவதில்லை: முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரும் வட மாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன்!

Wednesday, November 13, 2013
இலங்கை::பொதுநலவாய மாநாட்டுக்கு அரசாங்கத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டாலும் பங்கேற்கப் போவதில்லை என முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரும் வட மாகாண முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வலி. வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தியும், வீடழிப்பினைத் தடுத்து நிறுத்தக் கோரியும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் பேராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று முதலமைச்சர் கலந்து கொண்டார்.

அங்கு வைத்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே எடுத்த முடிவுக்கு அமைவாக கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் தான் பங்கேற்கப் போவதில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்தார்!

No comments:

Post a Comment