Wednesday, November 13, 2013

புலிகளின் ஆதரவு சனல்4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரேவிற்கு: மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா!

Wednesday, November 13, 2013
இலங்கை::புலிகளின் ஆதரவு சனல்4  தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரேவிற்கு, இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சவால் விடுத்துள்ளார்.

புலிகளின் ஆதரவு சனல்-4 தொலைக்காட்சியின் ஊடாக இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பிலான காணொளிகளை மக்ரே வெளியிட்டிருந்தார்.

இந்த காணொளிகள் தொடர்பில் தம்முடன் பகிரங்க விவாதம் ஒன்றை நடாத்த முடியுமா என ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான நியூயோர்க்கின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சவால் விடுத்துள்ளார்.

இது தெடார்பில் விவாதம் நடத்த வருமாறு அமெரிக்காவில் சவால் விடுத்த போது, மக்ரே அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.

மக்ரே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும், இங்கு விவாதம் நடத்துவது பொருத்தமானதாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment