சென்னை::பாஜ ஆட்சி அமைந்தவுடன் மீனவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்‘ என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக பாஜ சார்பில் உலக மீனவர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் அன்னி பெசன்ட் சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த சிங்கார வேலர் உருவப்படத்துக்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், மாநில செயலாளர் வானதி சீனிவாசன், மீனவர் பிரிவு தலைவர் சதீஷ், மாநில செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் காளிதாஸ் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, பொதுமக்களுக்கு மீன்கள் இலவசமாக வழங்கப்பட்டன. அப்போது, பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மத்தியில் பாஜ ஆட்சி அமையும். அப்போது, மீனவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கைக்கு ஆதரவாக எந்த நாடு வந்தாலும், அதை பாஜ தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடும். காங்கிரஸ் அரசு தமிழக மீனவர்கள் மட்டுமல்லாமல், இந்திய மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எல்லாருக்கும் இந்த ஆட்சி இருக்கும் வரை தொல்லைதான்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

No comments:
Post a Comment