Friday, November 22, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலருக்கு எதிராக இவ்வாறு போர்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளன.
சிறுவர் போராளிகளை புலிகள் இயக்கத்தில் இணைத்த இரண்டு பேர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.
இது தொடர்பிலான சாட்சியங்களை முன்வைக்கத் தயார் என மட்டக்களப்பு மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் ஏகப் பிரதிநிதிகளாக செயற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான ஆதாரங்கள் முள்ளிவாய்க்கால் பிரதேச பதுங்கு குழிகளில் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment