Thursday, November 21, 2013

யாழ் பல்கலைக்கழக புலி ஆதரவு தரப்பினர் எதிர்வரும் வாரம் மாவீரர் தின நிகழ்வுகளை அனுஸ்டிக்க முயற்சி!!

Thursday, November 21, 2013
இலங்கை::போராட்டங்களை தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபடுகிறது. புலி

சில பல்கலைக்கழக பணியாளர்கள் மாணவர்களைத் தூண்டி போராட்டங்களை நடாத்த உத்தேசித்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
 
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்விற்காக நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. எனினும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கான விடுமுறை சற்று நீடிக்கப்பட்டுள்ளது, பிரிவினைவாத அடிப்படையில் போராட்டங்களையோ ஆர்ப்பாட்டங்களையோ நடாத்த அனுமதிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஆதரவு தரப்பினர் எதிர்வரும் வாரம் மாவீரர் தின நிகழ்வுகளை அனுஸ்டிக்க முயற்சி எடுத்து வருவதாகவும் இதனை தடுக்கும் நோக்கில் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
 

No comments:

Post a Comment