Thursday, November 21, 2013
மதுரை::தஞ்சாவூர் அருகே, "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' துவக்க விழாவில்
விதிமீறல் தொடர்பான வழக்கில், சசிகலா கணவர் நடராஜனுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை
முன்ஜாமின் வழங்கியது.
இலங்கை போரில் புலி தீவிரவாதிகள் கொல்லப்பட்டதன் நினைவாக, உலகத் புலிகளின் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை சார்பில், தஞ்சாவூர் அருகே விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நவ., 8 முதல் 10 வரை நடந்தது. இரவு 10 மணி வரை ஒலிபெருக்கி பயன்படுத்த, போலீசார் அனுமதித்தனர். இதை மீறி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி பயன்படுத்தியதாக, நடராஜன் மற்றும் அவரது சகோதரர் சாமிநாதன் உட்பட சிலர் மீது தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இருவரும் முன்ஜாமின் கோரி, ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர்.
நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாகக்கூறி, சுற்றுச்சுவரை
இடித்தனர். சட்டவிரோதமாகக்கூடி, அரசுப் பணியை செய்யவிடாமல் தடுத்து, மிரட்டல்
விடுத்ததாக புலிகளின் உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை அமைப்பாளர் பழ.நெடுமாறன் உட்பட 81
பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஜாமின் கோரி, ஐகோர்ட் கிளையில் மனு செய்தனர்.
நீதிபதி சி.டி.செல்வம் முன், விசாரணைக்கு மனுக்கள் வந்தன. மனுதாரர் தரப்பில்
வக்கீல்கள் சந்திரசேகர், அரண்மனைப்பாண்டியன் ஆஜராகினர்.
அரசு வக்கீல்: நெடுஞ்சாலை இடத்தை ஆக்கிரமித்துள்ளதாகவும், இடத்தை காலி செய்யுமாறும் நெடுமாறன் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மனுதாரர்களுக்கு, முன்ஜாமின் ஜாமின் வழங்கக்கூடாது.
சந்திரசேகர்: ஏற்கனவே, நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அது காலாவதியான பின், இருதரப்பிற்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அது நிலுவையில் உள்ளது என்றார். அவர்,"சம்பந்தப்பட்ட இடத்திற்கு உரிமை கோரமாட்டோம். அங்கு எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம்,' என மனுதாரர்கள் தரப்பில் உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தார். நடராஜன், சாமிநாதனுக்கு முன்ஜாமின், நெடுமாறன் உட்பட 81 பேருக்கு ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment