Thursday, November 28, 2013
இலங்கை::சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் ஆறு பேரடங்கிய உயர்மட்டக் குழுவொன்று பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஜகத் ஜயசூரிய மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க கடந்த நவம்பர் 26ஆம் திகதி. கொழும்பிலுள்ள அவரது காரியாலயத்தில் சந்தித்தனர்.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் பிரதிப் பிரதானி வாங் குவாங்ஷொங் தலைமையிலான குழுவில் சீனத்தூதுவரும் கலந்து கொண்டார்.
விவாதங்களின் போது இராணுவ பிரதிநிதிகள் பயிற்சி திட்டங்கள், நிபுணத்துவம் மற்றும் அதிகாரி / பிற ரேங்க் பயிற்சி மேலும் வலுப்படுத்தும் பரிமாற்றம் சாத்தியக்கூறுகள் பரிமாற்றம் உட்பட இருதரப்பு முக்கியத்துவம் விஷயங்கள் பரிமாரப்பட்டன,
இச்சந்திப்பின்போது முக்கியமான இருதரப்பு உறவுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதுடன் கருத்துப் பரிமாறலின்போது “நாம் சமாதானம் நிலவிய காலம் உட்பட கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இலங்கைக்கு உதவி வருகின்றோம்” என பிரதிப் பிரதானி வாங் குவாங்ஷொங் தெரிவித்தார்.
சீன அதிகாரிகள் இலங்கை இராணுவத்தின் தொழில்சார் தகைமைகளைப் புகழ்ந்த்துடன் சீன பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு பயிற்சி நெறிகளில் அவர்களை இணைத்துக் கொள்ளவும் உறுதியளித்தனர்.
இந் நிகழ்வை பிரதிபளிக்கும் முகமாக இருதரப்பினரிடையேயும் நினைவுச்சின்னங்களும் பரிமாரப்பட்டன.




.jpg)

.jpg)


No comments:
Post a Comment