Thursday, November 21, 2013

பிரித்தானிய அரசியல்வாதிகள் இலங்கையை மீளவும் காலணித்துவ நாடாக பிரகடனம் செய்ய முயற்சி: சஜித் பிரேமதாச!

Thursday, November 21, 2013
இலங்கை::பிரித்தானிய அரசியல்வாதிகள் இலங்கையை மீளவும் காலணித்துவ நாடாக பிரகடனம் செய்ய முயற்சித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அண்மையில் பிரித்தானிய பராளுமன்றில் இலங்கை தொடர்பில் நடைபெற்ற விவாதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய அரசியல்வாதிகள் கோரி வருவதாகவும், இது இலங்கையை மீளவும் காலணித்துவ ஆட்சியின் கீழ் கொண்டு வரும் முறய்சியாக கருதப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பேதங்களை களைந்து சர்வதேச விசாரணைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேசம் தலையீடு செய்ய அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வலுவான ஓர் எதிர்க்கட்சியின் இயக்கம் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இராணுவப் படையினருக்கும், காவல்துறையினருக்கும் எதிரான சர்வதேச குற்றச்சாட்டுக்களை முறியடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் அணி திரள வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  

No comments:

Post a Comment