Thursday, November 21, 2013

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் நள்ளிரவில் சிறைப்பிடிப்பு!

Thursday, November 21, 2013
புதுக்கோட்டை::புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் நேற்று காலை உரிய அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
 
அவர்கள் இந்திய கடல் எல்லையான கோ
டியக் கரைக்கு தென்கிழக்கே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் அங்கு இலங்கை கடற்படைக்கு சொந்தமான 3 குட்டி ரோந்து கப்பல்கள் வந்தன. இதனை பார்த்ததும் மீனவர்கள் பயந்து போய் வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானார்கள். ஆனால் அதற்குள் மீனவர்களின் படகுகளை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
 
இதில் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 2 படகுகளும், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 3 படகுகளும் சிறைப்பிடிக்கப்பட்டன. ஜெகதாப்பட்டினம் படகில் இருந்த குமரேசன், ஆனந்த், முத்தையா, குழறரசன், ராமன், பார்த்திபன், ராஜன், மணிமுத்து, பாரதி, தமிழ்செல்வன் மற்றும் கோட்டைப்பட்டினம் படகில் இருந்த 11 மீனவர்கள் உள்பட 21 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப் பிடித்தனர்.
 
அவர்களை படகுகளுடன் இலங்கையில் உள்ள காங்கேசம் துறை முகாமுக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பிறகே மீனவர்கள் 21 பேரும் விடுதலை செய்யப்படுவார்களா? அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா? என்பது தெரிய வரும்.
 
ஏற்கனவே கடந்த மாதம் 19–ந்தேதி சிறைப்பிடிக்கப்பட்ட 15 மீனவர்களும், கடந்த (நவம்வர்) 5–ந்தேதி சிறைப்பிடிக்கப்பட்ட 17 மீனவர்களும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் காவலை வருகிற 30–ந்தேதி வரை நீடித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
 
இந்தநிலையில் மீண்டும் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment