இலங்கை::சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் சுமத்தும் ஆவணப்படங்கள் தொடர்பில் பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் கடும் விமர்சங்களை முன்வைத்துள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சனல் 4 தொலைக்காட்சியின் சர்ச்சைக்குரிய ஆவணப்படங்கள் ஸ்டார் வோர்ஸ் படங்களை போன்றது என இலங்கையின் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் குறிப்பிட்டார்.
சனல் 4 ஊடகத்தினர் மிகவும் உணர்வுமிக்கவர்கள் ஆனால் அவர்களிடம் பொறுப்புக் கூறும் ஊடகவியல் தொடர்பான உதாணரங்கள் இல்லை.
சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனரான கெலும் மக்ரேவின் அண்மைய ஆவணப்படமான போர் தவிர்ப்பு வலயம் வெளிப்புற மற்றும் உத்தியோகபூர்மற்ற, நிரூபிக்க முடியாத காட்சிகளை கொண்டுள்ளது.
இரண்டாவ
து கட்சிகள் சனல் 4 ஊடகவியலாளர்களால் படமாக்கப்பட்டுள்ளது.
சனல்4 தொலைக்காட்சி நிறுவனம், ஒரு சிறிய நிறுவனம் அதனை பெரும்பாலான மக்கள் பார்ப்பதில்லை. இதனால் கவலைப்பட வேண்டிய தேவையில்லை.
சனல் 4 வின் இரண்டு ஆவணப்படங்களில் இலங்கையில் இருந்தவர்களிடம் கருத்துக்கள் பெறப்படவில்லை. வெளிநாட்டில் உள்ள உள்ள புலிகள் ஆதரவாளர்களின் கருத்துக்களே அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த ஆவணப்படங்களை சி.என்.என் தொலைக்காட்சி ஒளிப்பரப்பியதால் இலங்கை மீதான குறுக்கீடு ரீதியான வெளி அழுத்தங்களை ஏற்படுத்தியது என்றார் இலங்கையின் உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ்.

No comments:
Post a Comment