Thursday, November 21, 2013

புலம்பெயர் புலிகள் ஆதரவு தமிழரின் அழுத்தமே கெமரூனின் குழப்ப நிலைக்குக் காரணம்: தினேஷ் குணவர்தன!

Thursday, November 21, 2013
இலங்கை::பொதுநலவாய மாநாட்டில் இறுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கைச்சாத்திடப்பட்ட கொழும்பு பிர கடனத்தில் எந்தவொரு பகுதியிலும் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் இலங்கைக்கெதிராக அழுத்தம் கொடுக்கக் கூடிய எந்தவொரு கருத்துக்களும் இடம் பெற்றிருக்கவில்லையென அரசாங்கத்தின் பிரதம கொரடாவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று உறுதியாக தெரிவித்தார்.
 
இலங்கை வந்த பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் தனிப்பட்ட ரீதியாகவே இலங்கையின் மனித உரி மைகள் விவகாரம் குறித்து தனது கருத்துக்களை முன்வைத்துச் சென்றாரேயொழிய, அவரது கருத்துக்களுக்கும் கைச்சாத்திடப் பட்டுள்ள கொழும்பு பிரகடனத்துக்கும் எவ்வித தொடர்புமில்லையென்பதனையும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெளிவாக வலி யுறுத்தினார்.ஜனாதிபதியவர்கள் கொழும்பு பிரகடனத்தில் கைச்சாத்திட்டதன் மூலம், பிரிட்டிஷ் பிரதமர் மனித உரிமைகள் விசாரணை மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பில் இலங்கைக்கெதிராக விடுத்த அழுத்தத்திற்கு, இலங்கை அரசாங்கம் இணங்கியிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
 
ஜனாதிபதியவர்கள் நாட்டுத் தலைவராக பதவியேற்றது முதல் நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டியமை ஐக்கிய தேசியக் கட்சியினரின் பிரசாரங்களில் நம்பகத்தன்மையில்லாமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் அமைச்சர் கூறினார்.இன்னுமொரு நாட்டிற்குள் வந்த பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் உள்ளிட்ட அவரது பிரதிநிதிகள் பிரிட்டிஷ் கலாசாரத்துக்கு முரணான வகையில் நடத்து கொண்டுள்ளார்கள் என்றால் அதற்குக் காரணம் வெளிநாடுகளில் வசிக்கும் புலம்பெயர் வாழ் புலிகள் ஆதரவு தமிழர்களின் தவறான வழிகாட்டலேயென்பது இச்சந்தர்ப்பத்தின் மூலம் எமக்கு தெட்டத் தெளிவாகியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
எது எவ்வாறாயினும் பிரிட்டிஷ் பிரதமர் கெமரூனின் கருத்துக்களை நாம் கடுமையாக ஆட்சேபிக்கிறோம். அவர் இலங்கையில் தெரிவித்துச் சென்ற கருத்துக்கள் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்குரியதல்ல. டயஸ்போராக்கள் கூறுவதனையும், சித்திரிப்பதனையும் தம் மனக்கண்முன் காட்சிப்படுத்திப் பார்த்த பிரதமர் கெமரூன் தனது தனிப்பட்ட அபிப்பிராயமாகவே கருத்துக்களை முன்வைத்துச் சென்றுள்ளார்.ஆனால் இந்தக் கருத்துக்களுக்கும் கைச்சாத்தி டப்பட்டுள்ள கொழும்பு பிரகடனத்துக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை. பிரகடனத்தின் எந்தவொரு பகுதியிலும் கெமரூன் மட்டுமின்றி இலங்கைக்கெதிராக அழுத்தம் கொடுக்கும் எந்தவொரு நாட்டின் அபிப்பிராயங்களும் அதில் பொதுநலவாயத்தின் அனைத்து நாடுகளுக்கும் பொதுவானதொரு பிரகடனமாகுமென்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தியினை நாம் கண்டு உணர்ந்துள்ளோம். இந்நிலையில் எமது நாட்டின் ஜனநாயகம் மட்டுமன்றி பொதுநலவாயத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளதும் சுதந்திரம் மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு எமது ஜனாதிபதியவர்கள் செயற்பட வேண்டும். இதற்குத் தடையாகவுள்ள சர்வதேச சூழ்ச்சிகளை முறியடிக்க நாம் ஜனாதிபதியவர்களின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில் செயற்படுவோமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment